பக்கம் எண் :

பக்கம் எண்:517

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           வாய்த்த சூழ்ச்சி வருட காரனொ
           டியாத்த நண்பினன் யானென வாருணி
           மேற்சென் றழித்தன் மேயினன் விரும்ப
 
                   (ஆருணியின் மனநிலை)
                66 - 68 : வாய்த்த.........விரும்ப
 
(பொழிப்புரை) சிறந்த சூழ்ச்சி வாய்ந்த வருடகாரனோடு பொருந்திய நட்புரிமையையுடையேன் யான் என்று கருதி அவ்வாருணி மன்னன் செருக்குற்று உதயணன்மேல் போருக்குச் சென்று அவனை அழித்தலைப் பெரிதும் விரும்பாநிற்க; என்க.
 
(விளக்கம்) மேற்சென்று - போர்மேற் சென்று. மேயினன் விரும்ப - பெரிதும் விரும்ப.