பக்கம் எண் :

பக்கம் எண்:519

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
         
     80    விள்ளா நண்பின் விறலோ னமைச்சன்
           பூரண குண்டலன் றாரணி மார்ப
           பெயர்த்து நகரம் புகுது மிந்நாள்
           அகைத்த தறிந்தனை யருண்மதி நீயேன்
           றடையார்க் கடந்து தடைபா டகற்றிய
     85    அறிந்துபடை விடுப்ப தன்னது பொருளெனச்
           செறிந்த தாகச் செப்பலிற் சீறிக்
 
                (பூரண குண்டலன் கூற்று)
                80 - 86 : விள்ளா.........சீறி
 
(பொழிப்புரை) பிரிதலில்லாத நட்பினையுடைய ஆருணிமன்னனுடைய அமைச்சனாகிய பூரண குண்டலன் ஆருணியரசனை நோக்கி, ''மலர் மாலையணிந்த மார்பையுடையோய்! இந்தநாளில் புள் நிமித்தமும், பிற நிமித்தங்களும், தீயனவாகி நம்மைத் தடுத்ததனை நீ அறிகுவை, நாம் இன்று மீண்டும் நகரத்திற்குச் செல்வோம். சென்ற பின்னர் நம் பகைவரை எதிர்த்து வென்று தடைகளை அகற்றுவதற்கு நல்ல நாளும் நிமித்தங்களும் அறிந்து நம் படைகளைப் பகைவர் மேல் விடுக்க வேண்டும். அதுவே நல்ல காரியமாம்'' என்று தனது கருத்தினைச் செறிவுடையதாகக் கூறுதலால் அது கேட்ட வருடகாரன் அவனைச் சினந்து; என்க.
 
(விளக்கம்) விறலோன் : ஆருணி. அகைத்தது - தடுத்தமையை. என்று - எதிர்த்து. மதி : முன்னிலையசை. அகற்றிய - அகற்றுவதற்கு. விடுப்பது - விடுக்க. பொருள் செறிந்ததாக என்க.