பக்கம் எண்:52
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 4. புறத்தொடுங்கியது | | சேறுபடு செறுவி
னாறுநடு கடைசியர்
கழிப்புநீ ராரலொடு கொழுப்பிறாக்
கொளீஇய
நாரைச் சேவல் பார்வலொடு
வதிந்த எழிற்பூம்
புன்னைப் பொழிற்புடை நிவந்த 45
வள்ளிதழ்த் தாமரை வான்போ துளரி
முழுத்திரட் டெங்கின் விழுக்குலை
நெற்றி அகமடல்
வதிந்த வன்புபுரி பேடை
நரல்குர லோசை யளைஇ யயல
| |
(தாபதப் பள்ளி அமைந்துள்ள
இடம்) 41-48 ; சேறு,,,,,,,,,,,,அளைஇ
| | (பொழிப்புரை) உழுது
சேறுபடுத்தப்பட்ட கழனியிலே நாற்று நடுகின்ற உழத்தியர் வடியவிட்ட
நீரின்கண் ஆரல்மீனையும் கொழுப்புடைய இறாமீனையும் இரையாகக்
கொள்ளல்வேண்டி நாரையின் சேவல் கூர்ந்த பார்வையோடு உறையாநின்ற அழகிய
மலரையுடைய புன்னையம்பொழிலின் பக்கத்தே நீரினின்றும் உயர்ந்துள்ள
பெரிய இதழ்களையுடைய வெண்டாமரை மலரை அலகாற் கோதித்தின்று
திரண்ட தெங்கினது முழுமையான சிறந்த குலையின் மேல் பாளையினகத்தே
சேவலின்பால் அன்பு புரிகின்ற பெடையன்னம் அச்சேவலை அழைத்து நரலா நின்ற
குரலினது ஓசை கலந்து என்க.
| | (விளக்கம்) செறு-கழனி.
நாறு-நாற்று. கழிப்பு நீர் - வடிய விட்ட நீர். ஆரலும் இறாவும் மீன்கள்
பார்வல் - பார்வை. முழுவிழுக் குலை என்க. நரலுதல் - ஒலித்தல். அளைஇ -
கலந்து.
|
|
|