| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 27. பறை விட்டது |
| |
கொள்ளா ரழிவினைக் கூறு மிவையென
வள்ளிதழ் நறுந்தார் வருட
காரன்
ஊக்கங் கொளுவ வாக்கங் கருதி
|
| |
(வருடகாரன்
கூற்று)
87 - 89 : கொள்ளார்.........கொளுவ
|
| |
| (பொழிப்புரை) அவ்வமைச்சன் நாவினையடக்கி, ஆருணி
மன்னனைப் பார்த்து. ''பெருமானே! இத்தீய நிமித்தங்கள் நம் பகைவரது அழிவினையே
குறிப்பனவாம்'' என்று பெரிய இதழையுடைய நறிய மலர் மாலையணிந்த அவ்வருடகாரன்
அம்மன்னனுக்கு ஊக்கமுண்டாக்க; என்க.
|
| |
| (விளக்கம்) கொள்ளார் - பகைவர். இவை - இந்நிமித்தங்கள். கொளுவ -
கொள்விக்க
|