உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
தாரணி மார்ப னாருணி யரசனும்
125 காந்தா ரகனுங் கழற்காற்
சாயனும் தேந்தார்ச்
சூரனுந் திறற்பம சேனனும்
இந்நாற் றலைவரு மெரிகான்
றெதிர்ப்பச்
செந்நே ராகச் செல்வுழி யெதிரே
|
|
(ஆருணியின்
செயல்) 124
- 128 : தாரணி.........எதிரே |
|
(பொழிப்புரை) மாலையணிந்த மார்பினையுடைய
ஆருணியரசனும் காந்தாரகனும் வீரக் கழல் கட்டிய காலையுடையசாயனும் தேன் பொருந்திய
மாலையணிந்த சூரனும் ஆற்றல் மிகுந்த பிரம சேனனும் என்னும் இந்த நான்கு
பெருந்தலைவர்களும் கண்களில் தீக் காலும் படி வந்து எதிர்ப்ப, ஆருணியரசன் நேரே வந்த
பொழுது; என்க. |
|
(விளக்கம்) ஆருணியரசனும் காந்தாரகனும் சாயனும் சூரனும் பிரமசேனனும் ஆகிய இந்த நாலு
தலைவர்களும் உதயணன் முதலியோரை எதிர்க்க, ஆருணி உதயணனுக்கு எதிரே வரும்பொழுது என்க.
பமசேனன் - பிரமசேனன். |