| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 27. பறை விட்டது |
| |
காந்தா ரகனைக் கடக
பிங்கலர் 130
தேந்தார் மார்பந் திறப்ப
வெய்ய
ஆழ்ந்த வம்போ டழிந்தன
னாகி
வீழ்ந்தன னவனும் வீழ்ந்த பின்னர்
|
| |
(கடகபிங்கலர்
செயல்)
129 - 132 : காந்தாரகன்.........பின்னர்
|
| |
| (பொழிப்புரை) அந்த நான்கு தலைவர்களுள் வைத்துக்
காந்தாரகன் என்பவனைக் கடகபிங்கலர் எதிர்த்து அவனுடைய தேன் மணக்கும்
மலர்மாலையணிந்த மார்பினைத் தம் அம்புகளாலே திறவாநிற்ப, அவனும் கொடியனவாய்த்தன்
மார்பின்கண் அழுந்திய அந்த அம்புகளோடே நிலத்தில்வீழ்ந்து இறந்தான், அவன் இறந்த
பின்னர்......என்க.
|
| |
| (விளக்கம்) மார்பத்தை அம்புகளாலே திறப்ப என்க. வெய்யனவாய் மார்பில் அழுந்திய
அம்போடு என்க. 133 ஆம் அடி
அழிந்தொழிந்தது.
|