உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
சீற்றத் துப்பிற் சேதியர்
பெருமகன்
கழலணி காலினன் கரண
யாப்பினன்
நிழலணி நல்வா ளழல வீசித்
140 தாங்கருங் காதற் றம்பியர்
சூழப்
பூங்கழற் றோழர் புடைபுடை
யார்தர ஒன்னாப்
பகையா னுதயண னென்பேன்
இன்னா மன்ன நின்னுயி
ருணீஇய
வந்தனெ னென்றே சென்றுமே னெருங்க
|
|
(உதயணன்
செயல்)
137 - 144 : சீற்ற.........நெருங்க
|
|
(பொழிப்புரை) சினத்தையும் வலிமையையும் உடைய சேதி
நாட்டினர் மன்னனாகிய உதயணன் வீரக்கழல் கட்டிய காலையுடையனாய்ப் போர்க்கவசம்
பூண்டவனாய் ஒளியுடைய தனது நல்ல வாளை மின்னும்படி வீசிக்கொண்டு பொறுத்தற்கரிய
அன்புடைய தம்பியர் தன்னைச் சூழ்ந்துவர அழகிய வீரக்கழல் கட்டிய காலையுடைய தோழர்கள்
பக்கங்களிலே வாராநிற்ப, ஆருணி மன்னனை நோக்கி, ''இன்னாமையேயுடைய அரசனே! உன்னுடைய
உயிரைக் குடிப்பதற்கு நின்னோடு பொருந்தாத பகைவனாகிய உதயணன் என்னும் பெயரையுடைய
யான் இதோ வந்தேன் காண்'' என்று சொல்லி நெருங்கிச்சென்று அவனை எதிர்க்க;
என்க.
|
|
(விளக்கம்) சேதியர் பெருமகன் : உதயணன். கரண யாப்பு - போர்க்கவசம். ஒன்னாப் பகை -
பொருந்தாத பகை. நிழல் - ஒளி. தம்பியர் : கடகபிங்கலர். தோழர் : இடவகன்
முதலியோர்.
|