பக்கம் எண் :

பக்கம் எண்:529

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
         
     145    இடுகளி யானை யெதிர்கண் டாங்குருத்
            தடுதிற லாருணி யவனுரை பொறாஅன்
            பன்மயி ரணிந்த பத்திச் சேடகம்
            மின்னொளிர் வாளொடு பின்னவன் வாங்கக்
 
                  (ஆருணியின் செயல்)
              145 - 148 : இடுகளி............வாங்க
 
(பொழிப்புரை) அவ்வுதயண மன்னனைக் கண்ட போர்த்திறன் மிக்க ஆருணி மதமூட்டப்பெற்ற ஒரு களிற்றியானையைத் தன் எதிர்கண்ட மற்றொரு களிற்றியானைபோல அவ்வுதயணனுடைய மொழிகளைப் பொறானாய்ப் பலவாகிய மயிரையுடைய தோல் போர்த்த சித்திரப்பத்தியையுடைய கேடகத்தையும், மின்னல் போல ஒளிருகின்ற வாளையும் கைகளில் பற்றாநிற்ப; என்க.
 
(விளக்கம்) இடுகளி யானை - அதிமதுரத்தழை முதலியவற்றையிட்டு மதமூட்டப்பெற்ற யானை என்க. மற்றொரு யானை - எதிர்கண்டாங்கென வருவித்தோதுக. அவன் : உதயணன். மயிரையுடைய தோல் அணிந்த என்க. பத்தி - வரிசை. சித்திரப் பத்தி என்க. சேடகம் - கேடகம் ; கிடுகு. பின்னவன் - பிற்கூறப்பட்ட ஆருணி.