உரை |
|
3. மகத காண்டம் |
|
4. புறத்தொடுங்கியது |
|
நரல்குர லோசை
யளைஇ யயல
கணைக்காற் கமுகி னிணைப்பொதி
யவிழ்ந்த 50 அம்மென்
பாளையு ளசைந்த வண்டினம்
மம்மர் வைகறை மருங்குதுயி லேற்ற
அனந்தர் முரற்சி யளைஇப்
புதைந்த பூங்கண்
முற்றிய புறத்துப் புடை யாடித்
தேங்கட் டும்பி தீங்குழ
லிசைப்ப |
|
(இதுவுமது) 48 - 54
; அயல............இசைப்ப |
|
(பொழிப்புரை) பக்கத்திலுள்ளனவாகிய திரண்ட அடிப்பகுதியினையுடைய கமுகினது இரட்டையாகிய
விரிந்த அழகிய மெல்லிய பாளையினூடே தங்கிய வண்டுகள் மயக்கந்தரும்
வைகறையாமத்தே துயிலெழுந்து துயின் மயக்கத்தோடே முரலாநின்ற இசையும்
கலந்து தேன்முதிர்ந்த கூம்பிய மலர்ப் புறங்களிலே எல்லாம் பக்கங்களிலே
பறந்து ஆடி இனிய தேன் கொள்ளும் தும்பிகள் இனிய குழலிசைபோன்று
முரலாநிற்பவும் என்க. |
|
(விளக்கம்) கணை-திரண்ட,
இரட்டை-இணைந்த எனினுமாம். அசைந்த - தங்கிய. மம்மர் - மயக்கம்,
அனந்தர் - துயின் மயக்கம். முரற்சி - இசை. |