பக்கம் எண்:530
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 27. பறை விட்டது | | காதி
வெவ்வினை கடையறு காலைப் 150
போதி பெற்ற புண்ணியன் போல
வீதல் சான்ற வெகுளி
முந்துறீஇ எதிர்த்த
மன்னனைச் செயிர்த்தனன்
றலைப்பெய் தியாவரும்
வேண்டா விதன்பின்மற்
றிவனை வீய
நூறி வெஞ்சினந் தணிகென 155
ஏயர் பெருமக னெதிர்வது விரும்ப
| | (உதயணன்
செயல்) 149
- 155 : காதி.........விரும்ப | | (பொழிப்புரை) காதி கருமங்களாகிய வெவ்விய வினைகள்
அற்றொழிந்த காலத்தே மெய்யுணர்வினைப் பெற்ற ஓர் அறவோன் போல அவ்வுதயண மன்னன்
இறத்தற்குக் காரணமான சினத்தை முற்படுத்தித் தன்னை எதிர்த்த அவ்வாருணி மன்னனைச்
சினந்தவனாய் எதிர்த்து இனி எமக்குத் துணையாவார் யாவரும் வேண்டா ! இனிமேல்
இவ்வாருணியைச் சாகும்படி தாக்கி யான் என்னுடைய வெவ்விய சினத்தை ஆற்றுகேன் என்று
தன்னுட் கருதி அந்த ஏயர் பெருமகன் அவனொடு போர் செய்தலை விரும்பா நிற்ப;
என்க. | | (விளக்கம்) காதிவெவ்வினை - காதி கருமங்கள். அவையாவன - ஞாநாவரணீயம், தரிசநாவரணீயம்,
வேதநீயம், மோகநீயம், ஆயுஷியம், நாமம், கோத்திரம், அந்தராயம் என்னும் எட்டுவகை
வினைகள், ''காதி கண்ணரிந்த காசில், தனிமுதிர் கடவுள்'' (சீவக. 1240), ''காதிக்
கண்ணரிந்து வென்ற உலகுணர் கடவுள்'' (சீவக. 2713), என்பவற்றாலும் அவற்றின்
உரைகளாலும் உணர்க. போதி - மெய்யறிவு, ''போதிச் செல்வம் பூண்டவர்'' (சீவக.
366). வீதல் சான்ற - இறத்தலமைந்த. செயிர்த்தனன் - சினந்தனன். இதன்பின் என்றது
இனிமேல் என்பதுபட நின்றது. வீய - சாக. தணிகு - தணிவேன். ஏயர்பெருமகன் :
உதயணன். |
|
|