உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
பணிவில னெறிதலிற் படைக்கலஞ் சோரத்
175 தறுக ணிமையான் றருக்கினொ
டுறுதியேய்
பிறுமுனை மருங்கி னேடுபடத்
திருகி
மான்முதல் வகையி னான்மறை
யாளன் மழுவே
றுண்ட மன்னவன்
போலக்
கொழுநிணக் குருதியுட் குஞ்சரத் தோடும்
180 அழிவுகொண் டாருணி யவிந்தனன்
வீழ்தலிற்
|
|
(இதுவுமது)
174 - 180 : படைக்கலம்.........வீழ்தலின் |
|
(பொழிப்புரை) அவ்வாருணி மன்னன் தன் படைக்கலங்கள்
சோர்ந்து வீழாநிற்பவும், தனது அஞ்சாமையையுடைய கண்களை இமையாதவனாய்ச்
செருக்கினோடும், மன உறுதியோடும் இயைந்து சாதற்குக் காரணமான அப்போர்க்களத்தின்கண்
ஏக்கழுத்தம் படப் புரண்டு திருமாலை முதலாகவுடைய பிறப்பு வகைகளுள் வைத்து
நான்மறையாளனாகிய பரசுராமன் மழுப்படையால் ஏறுண்ட கார்த்தவீரியன்போலக் கொழுவிய
நிணத்தையுடைய குருதி வெள்ளத்தில் தனது யானையோடும் அழிவெய்தி இறந்து வீழ்தலாலே;
என்க. |
|
(விளக்கம்) தறுக ணிமையான் என்றது. படைக்கலம் ஏறுண்டுழியும் கண்ணிமையானாய் என்று அவன்
மறச்சிறப்புரைத்தவாறு. ''விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பின்,
ஓட்டன்றோவன்க ணவர்க்கு'' (திருக்குறள். 775) என்பது காண்க. ஏடு-எடுப்பு; ஏக்கழுத்தம்.
திருகி - புரண்டு. மான் முதல் வகையின் நான் மறையாளன் - திருமாலை முதலாக உடைய பிறப்பு
வகையின் வைத்துப் பரசுராமன் என்க. மன்னவன் : கார்த்தவீரியன். அவிந்தனன் -
அவிந்து; இறந்து. |