உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
கொற்றம்
பெற்றனன் குருகுலத்
திறையென
வெற்றி முரசம் வேழ
மேற்றி நகரினு
நாட்டினும் பகர்வன
ரறைகெனப் பின்னுரை
போக்கி யொன்னாற் குறுகிப் 185
படைத்தொழில் வதுவை நம்மாட்
டெய்த
முடித்தன னென்று சமழ்த்தன
னோக்கி
நடுக்கமில் வேந்தனை நாமு
முன்னின் றடக்கற்
பாலமென் றியாழறி வித்தகன்
அமரார் புகழத் தமரி னடக்குவித்
190 தீம மேற்றியவ னுரிமைச்
சனத்திற்
கேம மீகென் றிடவகற் டோக்க
|
|
(உதயணன்
செயல்) 181
- 191 : கொற்றம்.........போக்க |
|
(பொழிப்புரை) அது கண்ட உதயணன் முற்படக் கோசம்பி
நகரத்தினும், நாட்டினும், வள்ளுவர் வெற்றி முரசத்தை யானையின் மேலேற்றிக் ''குருகுலத்து
மன்னனாகிய உதயணன் வெற்றி பெற்றான்'' என்று கூறி முரசறைவாராக ! என்று
கட்டளையிட்டுப் பெருமை பொருந்திய தன் வீரப் புகழை யாண்டும் பரப்பிப் பின்னர்ப்
பகைவரை யடைந்து போர்க்களத்தின்கண் கிடந்த ஆருணிமன்னனுடலை இரக்கத்தோடு நோக்கி
இம் மன்னவன் போர்த் தொழிலால் நிகழும் வீரமகளை நம்மால் வதுவை செய்து கொண்டனன்.
நடுக்க மில்லாத இவ்வாருணி வேந்தனை நாமும் முன்னின்று அடக்கம் செய்வோம் என்று யாழறி
வித்தகனாகிய அவ்வுதயணன் தன் பகைவரும் தன்னைப் புகழும்படி தன் சுற்றத்தார்களைக்
கொண்டு அம்மன்னனுடலைத் தீப்பெய்து அடக்கம் செய்வித்த பின்னர், அம்மன்னனுடைய
உரிமைச் சுற்றத்தார்க்குச் சீவிதம் கொடுத்திடுக என்று இடவகனை விடுக்க ;
என்க. |
|
(விளக்கம்) வெற்றம் - வெற்றி. பின்னுரை போக்கி - பெருமை பொருந்திய தன் வீரப் புகழை
யாண்டும் பரப்பி. ஒன்னான் : ஆருணி மன்னன். படைத் தொழில் வதுவை - படைத்
தொழிலால் செய்து கொள்ளும் திருமணம். அஃதாவது வீரமகளை மணத்தல். சமழ்த்தனன் -
இரங்கினள். யாழறி வித்தகன் - உதயணன். அமரார் - பகைவர். ஈமம் - ஈமத்தீ.
உரிமைச் சனம் - கோப்பெருந்தேவி முதலிய மகளிரும் பரிவாரங்களுமாம். ஏமம் - பொருள்
; சீவிதம் ; பாதுகாப்பு மாம |