உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
உடனயிர்ப் பிரிய வுதயணன்
மந்திரி இடவகன்
வந்தமை யிசைத்தலும் விரும்பிக்
205 கொடியும் படாகையும் வடிவுபட
வுயரிச்
செறிந்த கதவந் திறந்தன ரெதிர்கொள
|
|
(யாவரும் நகர்
புகுதல்)
203 - 206 : உடன்.........கொள |
|
(பொழிப்புரை) நகர மாந்தர் இவ்வாறு கூறிய உடனே அவர்களுடைய ஐயந்
தீரும்படி உதயணனுடைய அமைச்சர்களுள் ஒருவனாகிய இடவகன் ஆங்கு வந்தமையை வருடகாரன்
கூறுதலும், அந்நகர மாந்தர் இடவகனின் வருகையைப் பெரிதும் விரும்பிக் கொடியும்
படாகையும் அழகுண்டாக உயர்த்தி மூடப்பட்ட கதவங்களைத் திறந்து இடவகன் வருடகாரன்
முதலியோரை எதிர்கொள்ளாநிற்ப; என்க. |
|
(விளக்கம்) உடன் - கூறிய உடன். அயிர்ப்பிரிய - ஐயந்தீர வருடகாரன் இசைத்தலும் என்க.
படாகை - பெருங் கொடி. வடிவு. அழகு. உயரி -
உயர்த்தி. |