உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
வென்றியொடு புக்கு நின்ற மறவருட்
டலைவ னாகிய தொலைவில்
விழுச்சீர்ப்
பாடுசால் சிறப்பிற் பாஞ்சால
ராயன் 210 கண்மணி யன்ன
திண்ணறி வாளன்
கும்பனென் போனை வெம்ப நூறி
|
|
(இதுவுமது)
207 -
211 : வென்றி.........நூறி
|
|
(பொழிப்புரை) இவ்வாறு வெற்றியோடு நகரத்திற்குள் புகுந்து நின்ற
மறவருள் வைத்து அழியாத பெரும் புகழையும் பெருமை பொருந்திய சிறப்பையும் உடைய ஆருணி
மன்னனுடைய கண்மணி போன்ற நட்புடையவனும், திண்ணிய அறிவாளனும், ஆகிய கும்பன் என்னும்
படைத்தலைவனைக் கண்டு அவன் மனம் வெம்பும்படி கொன்று ;
என்க.
|
|
(விளக்கம்) வென்றியோடு புக்கு நின்ற மறவர் என்றது உதயணன் மறவர்களை. கும்பன் என்பவன்
ஆருணியின் படைத் தலைவன். இவன் புறங்கொடுத்தோடி உதயணன் படை மறவர்களுள் புகுந்து
கொண்டு நின்றான் என்பதும், அவனை உதயணன் மறவர் கண்டு பிடித்துக் கொன்றனர் என்பதும்
இதன்கண் கூறப்பட்டன
|