உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
1. கொற்றங்கொண்டது |
|
ஊழி தோறு முலகுபுறங்
காத்து வாழிய
நெடுந்தகை யெம்மிடர் தீர்க்கெனக்
கோபுரந் தோறும் பூமழை
பொழியச் 25 சேயுயர் மாடத்து
வாயில் புக்குத்
|
|
(இதுவுமது)
22 - 25 : ஊழி.........புக்கு
|
|
(பொழிப்புரை) வாயில் மாடந்தோறும் மாந்தர் மேனின்று
எம்பெருமான் ஊழி தோறு ஊழி இவ்வுலகத்தைக் காத்து வாழ்க ! எம்முடைய இடர் களைந்து
எம்மைப் பாதுகாத்தருளுக ! என்று கூறி மலர்மழை பொழியா நிற்பவும் மிகஉயர்ந்த
கோபுரத்தினையுடைய பெருவாயிலிலே நுழைந்து; என்க.
|
|
(விளக்கம்) நெடுந்தகை: நெடிய புகழையுடைய உதயணன். கோபுரம்
வெளிக்கோபுரமும் உட்கோபுரமும் எனப் பலவாகலின் கோபுரந்தோறும் பூமழை பொழிய
என்றார். சேயுயர்மாடம் - மிக உயர்ந்த கோபுரம். அத்தாணி
மண்டபமுமாம்.
|