பக்கம் எண்:545
|
|
உரை | | 4. வத்தவ காண்டம் | | 1. கொற்றங்கொண்டது | | வியலக
வரைப்பிற் கேட்டோர்
புகழ
உயர்பெருந் தானை யுதயண
குமரன்
அமைச்சினு நண்பினுங் குலத்தினு
மமைதியிற் 35
பெயர்த்துநிலை யெய்திப் பேருந்
தழீஇ
.......................................
முதற்பெருங் கோயின் முந்துதனக்
கியற்றி
மணிப்பூண் கண்ணியர் மரபறி
மாந்தர்
முட்டில் கோலமொடு கட்டில்
படுப்ப
நோற்றார் விழையு நாற்பான் மருங்கினும்
40 முழவொலிச் சும்மையொடு முரசங் கறங்க
| | (உதயணன்
அரசுகட்டிலேறுதல்)
32 - 40 : வியல்.........கறங்க
| | (பொழிப்புரை) அகன்ற இடத்தையுடைய இந்நில உலகத்தின்கண் தன்
செயலைக் கேள்வியுற்றோரனைவரும் தன்னைப் புகழ்ந்து பாராட்டும்படி, உயர்ந்த பண்புடைய
பெரிய படைகளையுடைய உதயணகுமரன் தனக்குச் சிறந்த அமைச்சர்கள் வாய்த்தமையானும்
சிறந்த நண்பர்களின் கூட்டுறவு கிடைத்தமையானும் தனக்கியல்பாக உள்ள உயர்குலத்துப்
பண்பினானும் மீண்டும் அமைதியிலே நிலைபெற்று வாழ்க்கைப்பயனாகிய சிறந்த புகழையும்
தன்னோடு இழைத்துக்கொண்டு........ ..................... தான் வீற்றிருத்தற்
பொருட்டு அவ்வரண்மனைக்கண் முதன்மையுடைய பேரத்தாணிமண்டபம் ஒன்றனையும் இயற்றாநிற்ப,
வரலாற்று முறைமையறிந்தவரும் மணியணிகலன் உடையவரும், ஏனாதி, காவிதி என்னும்
பட்டங்களைப் பெற்று அவற்றிற்கு அறிகுறியாகப் பொற்பூங்கண்ணி அணிந்தவரும் ஆகிய நகர
நம்பியருள் வைத்து முட்டில்லாத ஒப்பனையோடு அரசுகட்டிலை முறைமையறிந்து இடாநிற்ப,
உலகினைத் துறந்து நோற்கும் துறவோர் தாமும் விரும்புதற்குக் காரணமான அவ்வரண்மனையின்
நான்கு பக்கங்களினும், மத்தளத்தை யுள்ளிட்ட இன்னிசைக் கருவிகளின் முழக்கத்தோடே
வெற்றி முரசங்களும் முழங்காநிற்ப; என்க.
| | (விளக்கம்) படைகளுக்குள்ள நல்லிலக்கணங்களால் உயர்ந்த
பெருந்தானை என்க அவையாவன : நான்குறுப்பானும் நிறைதல், ஊறஞ்சாமை, அறைபோகாமை,
புறமிடாமை, மறம், மானம், மாண்டவழிச்செலவு. சிறுமையின்மை, துனியின்மை, வறுமையின்மை
முதலியன. பேர் - புகழ். வாழ்க்கைப்பயன் அதுவேயாகலின் பேருந்தழீஇ என்றார்.
மணிப்பூண்கண்ணியர் என்றது காவிதி முதலிய பட்டங்களுக்கு உரிய மாலைகளையணிந்த நகர
நம்பியரை. மரபு - கட்டிலிடும் முறைமை. சும்மை - ஆரவாரம். கறங்க -
முழங்க.
|
|
|