உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
1. கொற்றங்கொண்டது |
|
விழவியல்
சும்மையொடு வியனகர்
துவன்றிக்
குடியுங் குழுவு மடியுறை
செய்ய ஏவல்
கேட்குங் காவல ரெல்லாம்
பெருந்திறைச் செல்வமொ டொருங்குவந் திறுப்பக்
45 களம்படக் கடந்து கடும்புகை
யின்றி
வளம்படு தானை வத்தவர்
பெருமகன்
மாற்றார்த் தொலைத்த மகிழ்ச்சியொடு
மறுத்தும்
வீற்றிருந் தனனால் விளங்கவை யிடையென்.
|
|
(இதுவுமது)
41 - 48 : விழவு.... ....இடையென்
|
|
(பொழிப்புரை) இவ்வாறு அரசு கட்டிலேறும் விழாவிற்குரிய
ஆரவாரங்களோடு அகன்ற அந்நகரத்தின் கண்ணுள்ள மாந்தர் எல்லோருங்கூடி மகிழாநிற்ப
குடிமக்களும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அடியின்கண் உறையாநிற்பவும், தான்
ஏவியவற்றைக் கேட்கும் ஏனைய மன்னர்களெல்லாம் மிக்க செல்வமாகிய திறைப் பொருளோடே
தன் முற்றத்திலே வந்து குழுமி, செவ்வி பெறாமல் தங்கி இருப்பவும், தன்
மாற்றாரையெல்லாம் போர்க்களத்திலே கொன்று அழித்தமையால் இனிக் கடும்பகைவர்
யாருமில்லாத வளமிக்க படையையுடைய அவ்வத்தவர் வேந்தன், பகைவரை அழித்தொழித்த
வெற்றி மகிழ்ச்சியோடு மீட்டும், அரசு கட்டிலேறி விளக்கமுடைய சான்றோர் அவையின்
நடுவே வீற்றிருப்பானாயினன் ; என்க.
|
|
(விளக்கம்) விழவு - முடிசூட்டுவிழவு. துவன்றி - செறிந்து;
செறிய என்க. குடி - ஆறங்கங்களுள் ஒன்று. குழு - ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும்.
அடியுறைசெய்ய - திருவடியின்கண் உறைப. இடம்பெறாமையால் ஒருங்கு வந்து இருப்ப என்றார்.
முன்பு வீற்றிருந்த அரசு கட்டிலே என்பது தோன்ற மறுத்தும் வீற்றிருந்தனன்
என்றார்.
|