உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
2. நாடு பாயிற்று |
|
ஊக்கமும்
வலியும் வேட்கையும் விழைவும்
மூப்படர்ந் துழக்க முடங்கி
னீரும்
யாப்பணி நன்னலந் தொலைய
வசாஅய்த்
தீப்பிணி யுற்றுத் தீரா தீரும
|
|
(இதுவுமது) 26 - 29 :
ஊக்கமும்...................தீராதீரும
|
|
(பொழிப்புரை) மனக் கிளர்ச்சியும் வலிமையும் அவாவும்
விருப்பமும் என்னும் இவையெல்லாம் கிழப்பருவம் மேலிட்டு உழக்குதலாலே கெட்டு உடல்
வளைந்துபோன முதுமையுடையீரும், உடற்கட்டும் அழகும் நல்ல இளமை நலமும் தொலைந்து போம்படி
தொழு நோய் முதலிய தீப்பிணியுற்று அப்பிணி தீரப் பெறாமல் மெலிந்தீரும்;
என்க.
|
|
(விளக்கம்) ஊக்கம் - மனக்கிளர்ச்சி. வலி - உடல் வலியும்
மன வலியும் ஆம். வேட்கை - அவா. விழைவு - விருப்பம். இவை இரண்டும் காரணமும்
காரியமும் ஆம். மூப்பு - முதுமை. உடல் முடங்கினீர் என்க. வீட்டினுள்ளே முடங்கிக்
கிடந்தீரும் எனினுமாம். யாப்பு - உடற்கட்டு. அணி - உடலழகு. நன்னலம் என்றது இளமையின்
நலத்தை, தீப்பிணி - தொழு நோய் முதலியன. அசாஅய் -
மெலிந்து.
|