உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
3. யாழ் பெற்றது |
|
மதிலுஞ் சேனையுண் மாணி
யாகிய அதிர்வில்
கேள்வி யருஞ்சுக
னென்னும்
அந்த ணாளன் மந்திரம்
பயின்றநல் 50
வகையமை நன்னூற் பயனனி
பயிற்றித்
தலமுத லூழியிற் றானவர்
தருக்கறப்
புலமக ளாளர் புரிநரப்
பாயிரம்
வலிபெறத் தொடுத்த வாக்கமை
பேரியாழ்ச்
செலவுமுறை யெல்லாஞ் செய்கையிற் றெரிந்து
|
|
(அருஞ்சுகன்
இயல்பு) 47
- 54 : மதில்...........தெரிந்து
|
|
(பொழிப்புரை) மதிலையுடைய உஞ்சை நகரத்தின்கண்
பிரமசாரியாகிய நடுக்கமில்லாத நூற்கேள்வியினையுடைய அருஞ்சுகன் என்னும் பார்ப்பனன்
ஒருவன் மந்திரங்கள் பயிலுதற்குக் காரணமான நல்ல முறையமைந்த நல்ல நூல்கள் பலவற்றையும்
பயனுண்டாக நன்கு பயின்று உலகின்கண் முதலூழியின்கண் வித்தியாதரர் செருக்கற்றுப்
போம்படி கலைத்தெய்வத்தின் அருளுடைய சான்றோர் முறுக்குடைய ஆயிரம் நரம்புகளை
வன்மையுண்டாகத் தொடுத்தியற்றிய திருத்தமமைந்த பேரியாழினது இயக்கமுறையையெல்லாம்
கரண வகைகளால் கற்றுத் தெரிந்து கொண்டு; என்க.
|
|
(விளக்கம்) உஞ்சேனை - உஞ்சை நகரம். மாணி - பிரமசாரி.
அதிர்வு - நடுக்கம். மந்திரம் பயின்ற - மந்திரங்கள் வழங்கா நின்ற. தலம் -
உலகின்கண். புலமகளாளர் - கலைத்தெய்வத்தின் அருள் பெற்ற சான்றோர், தானவர்
தருக்கறப் புலமகளாளர் தொடுத்த பேரியாழ் என்க. தானவர் - ஈண்டு வித்தியாதரர்.
வாக்கு - திருத்தம். பேரியாழ் - ஆதியாழ். "ஆயிர நரம்பிற் றாதியாழாகும்"
(நூல்).
|