உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
3. யாழ் பெற்றது |
|
யானைப் பேரினத் திடைப்பட்
டயலதோர்
...................................................
இமையோ ருலகிற் கேணி
யாகிய கான
வேங்கைக் கவர்சினை
யேறி 70 அச்ச
மெய்தி யெத்திசை
மருங்கினும்
நோக்கின னருகே யாக்க மின்றி
|
|
(அருஞ்சுகன்
வேங்கை மரத்திலேறி
நோக்குதல்)
67 - 71: அயலது.........நோக்கினன்
|
|
(பொழிப்புரை) பக்கத்திலே நின்ற (...........)
வானுலகத்திற்கு வைத்த ஓர் ஏணி போன்று உயர்ந்த வேங்கை என்னும் கரட்டுமரத்தினது
கவர்த்த கிளையின்கண் ஏறிப் பெரிதும் அச்சமெய்தி நான்கு திசைகளினும் நோக்கினனாக;
என்க
|
|
(விளக்கம்) இமையோர் - தேவர். இமையோருலகிற்கு ஏணியாகிய
என்றது வானுற உயர்ந்து நின்ற என்றவாறு. கவர்சினை,
வினைத்தொகை.
|