பக்கம் எண் :

பக்கம் எண்:582

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
         கொடைப்பெரு வேந்தன் குளிர்ந்தன னாகியென்
         படைப்பரும் பேரியாழ்ப் பண்ணொலி யிதுவென
         ஓர்த்த செவியன் றேர்ச்சியிற் றெளிந்து
         மெய்காப் பாளனை யவ்வழி யாய்வோன்
 
                   (இதுவுமது)
           116 - 119 : கொடை..............ஆய்வோன
 
(பொழிப்புரை) அதுகேட்ட வள்ளற் பெருமானாகிய அவ்வுதயணவேந்தன் பிறரால் இயற்றுதற்கரிய என்னுடைய பேரியாழாகிய கோடபதியினது பண்ணொலியே இஃது என்று தன் எஃகுச் செவியால் ஓர்ந்து தன் தேர்ச்சியினாலே அதுவே என்று துணிந்து அவ்வுண்மையை ஆராய்ந்தறிந்துகொள்ளும் பொருட்டுத் தன் மெய்காப்பாளனை அவ்விடத்தே ஆராய்கின்றவனை; என்க.
 
(விளக்கம்) கொடை - வண்மை. வேந்தன் : உதயணன். படைப்பரும்யாழ் - இயற்றுதற்கரிய யாழ். தெய்வயாழாகலின் இங்ஙனம் கூறினன். மெய்காப்பாளன் - தன் உடம்பைப் பாதுகாக்கும் இளைஞன்.