உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
4. உருமண்ணுவா வந்தது |
|
வகைத்தார்
மார்ப னகத்தே
யழல்சுடத் தம்பியர்ப்
பெற்றுந் தனியாழ் வந்தும் 10
இன்பம் பெருக வியைந்துண் டாடான்
செல்லுங் காலை மல்லன்
மகதத்துச் செருமுன்
செய்துழிச் சிறைகொளப்
பட்ட உருமண்
ணுவாவிற் குற்றது கூறுவென்
|
|
(இதுவுமது) 8 - 13 : வகை
...........கூறுவென்
|
|
(பொழிப்புரை) பல்வேறு வகைப்பட்ட மாலைகளையணிந்த உதயணமன்னன்
தன் நெஞ்சத்தே வாசவதத்தையின் பிரிவு என்னும் தீச்சுடுதலாலே தன் தம்பியராகிய
கடகபிங்கலரை மீண்டும் பெற்றும், ஒப்பற்ற பேரியாழாகிய கோடவதி மீண்டும் தன்பால்
வந்தும் இவற்றாலெல்லாம் இன்பம் பெருகப் பெறானாய் மனம்பொருந்த உண்ணலும் உண்ணான்,
ஆடலும் ஆடானாய்க் காலங்கழித்து வருமளவிலே, வளமிக்க மகதநாட்டிலே முன்னர்ச் சங்க
மன்னரொடு போர்செய்த காலத்தே எலிச்செவியரசனால் சிறைகொளப்பட்ட உருமண்ணுவா
என்னும் அமைச்சனுக்கு நிகழ்ந்த செய்தியை இனிக் கூறுவேன்,
|
|
(விளக்கம்) மார்பன் : உதயணன். அழல் - பிரிவுத்துன்பமாகிய
நெருப்பு. தம்பியர் - கடகபிங்கலர். யாழ் - கோடவதி. மனமியைந்து உண்டாடான் என்க.
மல்லல் - வளம். சங்கமன்னரொடு முன் செருச் செய்துழி என்க. செரு - போர்.
எலிச்செவியரசனால் சிறைகொளப் பட்ட என்க. கூறுவென் என்றது நூலாசிரியர்
கூற்று.
|