பக்கம் எண் :

பக்கம் எண்:599

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
         
     85    ஆற்றல் சான்ற தருசகற் கண்டவன்
           மாற்ற மெல்லா மாற்றுளிக் கூறி
           அவனுழைப் பாட்டகத் ததிபதி யாகிய
           தவறில் செய்தொழிற் சத்தி யூதியை
           வேண்டிக் கொண்டு மீண்டனன் போந்துழி
 
             (உருமண்ணுவாவின் செயல்)
            85 - 89 : ஆற்றல்...........போந்துழி
 
(பொழிப்புரை) அது கேட்ட உருமண்ணுவா ஆற்றல் மிக்க தருசக மன்னனைக் கண்டு அச்சாதகன் கூறிய மொழிகளை யெல்லாம் முறைப்படி எடுத்துக்கூறி அம் மன்னனிடத்துப் ''பாட்டக நகரத்துத் தலைவனும்'' தவறில்லாத செய்தொழிலையுடையவனும் ஆகிய ''சத்தியூதி'' என்பவனைத் தன்னோடுய்க்கும்படி வேண்டிப் பெற்றுக்கொண்டு அவ்விடத்தினின்றும் மீண்டும்போம் பொழுது; என்க.
 
(விளக்கம்) அவன் மாற்றம் - சாதகன் கூறிய மொழிகளை. அவனுழை - தருசகன்பால். பாட்டகம் - ஒரு நகரம். சத்தியூதி - அந்நகரத்துத் தலைவன். சத்தியூதியைத் தருசகன்பால் வேண்டி அழைத்துக் கொண்டு என்க.