பக்கம் எண் :

பக்கம் எண்:60

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
           மாய வொழுக்கமொடு சேயதை நோக்கி
           மிகுதிக் காதன் மகத மன்னனொடு
           சுற்ற மாக்குஞ் சூழ்ச்சிய ராகிக்
    100     கொற்ற வேந்தன் குறிப்புவழி யோடி
           அகத்துறைந் தொடுங்குதல் செல்லா ரகன்மதிற்
           புறத்தொடுங் கினராற் பொருள்பல புரிந்தென்.
 
                 (இதுவுமது)
          97 - 1o2 : மாய............புரிந்தென்
 
(பொழிப்புரை) இவ்வாறு  பொய் யொழுக்கத்தை மேற்கொண்டு
  அவ்வமைச்சர்கள்  எதிர்காலத்தே நிகழவேண்டிய செயல்களைக்
  கூர்ந்து நினைந்து அந்நிகழ்ச்சிக்கு உதவியாம் பொருட்டுப்
  பேரன்புடைய  அம்மகத   நாட்டு   மன்னனோடு   உதயண
  குமரனை உறவு கொள்வித்தற்குரிய செயலை ஆராய்ச்சி செய்பவராகி
  அவ்வாராய்ச்சிக்கு  ஏதுவாம்படி  வெற்றியுடைய அம் மகத
  மன்னன் பாற்சென்று அவன்குறிப்பின் வழியேசென்று அந்
  நகரத்தினூடே உறைந்து   மறைதலைச்  செய்யாமல் அந்நகரத்தின்
  அகன்ற மதிலின் புறத்தேயே  உள்ள  அத்துறவோர்  பள்ளியிலே.
  பயேவேறு செயல்களைச் செய்துகொண்டு கரந்துறைவாராயினர் என்க.
 
(விளக்கம்) மாய வொழுக்கம் - பொய் யொழுக்கம். கரந்
  துறைதலின் மாய வொழுக்கம்  உடையராதல்  வேண்டிற்று. சேயதை
  நோக்கி எதிர்காலத்தே நிகழவேண்டிய நிகழ்ச்சியை மனத்தானோக்கி
  என்க. அஃதாவது பகைவெல்லல். மிகுதிக்காதல்  -  பேரன்பு. வேந்தன்
  - மகத வேந்தன். ஒடுங்குதல். செல்லார் - ஒருசொல். பொருள்பல புரிந்து
  புறத்தொடுங்கினர் என மாறுக.

                 4. புறத்தொடுங்கியது முற்றிற்று.
   -----------------------------------------------------------------------