உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
4. உருமண்ணுவா வந்தது |
|
வருத்தந் தீர்ந்தபின் வருத்த
மானன் பூமலி
புறவிற் புண்டரங்
குறுகித் தேமொழித்
தேவியொடு தோழனைக்
கண்டு
தலைப்பா டெய்தித் தாங்கா வுவகையொடு
100 நலத்தகு நாகத் துறைவோர்
போல இன்ப
மகிழ்ச்சியொடு நன்கனம் போந்து
புகழ்க்கோ சம்பிப் புறத்துவந்
தயர்வறும்
மகிழ்ச்சி யெய்தி மனம்பிணி
வுறூஉம்
மதுகாம் பீர வனமெனுங் காவினுட்
105 புகுதந் தவ்வழிப் புதுவதின்
வந்த |
|
(இதுவுமது)
96 - 105 : வருத்த மானன்..........புகுதந்து |
|
(பொழிப்புரை) வருத்தமானன் என்னும் அக்குறுநில மன்னனுடைய மலர்கள் மிகுந்த முல்லைநிலப்
பகுதியின்கண்ணுள்ள புண்டர நகரத்தை யணுகி அங்குத் தேன் போன்ற மொழியினையுடைய
கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையையும் ஆருயிர்த் தோழனாகிய யூகியையும் கண்டு
அளவளாவி ஆற்றொணாத மகிழ்ச்சியோடு நன்மையால் தகுதி பெற்ற நாகர் நாட்டில் வாழும்
நாகர்களைப் போன்று இன்பத்தாலுண்டாய மகிழ்ச்சியோடே அப்புண்டர நகரத்தினின்றும்
புறப்பட்டு நன்றாக வந்து புகழையுடைய கோசம்பி நகரத்தின் புறத்தே எய்தி அயர்தலில்லாத
மகிழ்ச்சியை யடைந்து கண்டோர் மனத்தைப் பிணித்துக் கொள்ளும் 'மது காம்பீர வனம்'
என்னும் பெயரையுடைய பூம்பொழிலிலே புகுந்து; என்க. |
|
(விளக்கம்) புறவு - முல்லை நிலம். தேமொழித்தேவி :
வாசவதத்தை. தோழன் : யூகி. தலைப்பாடெய்தி - அளவளாவி. நாகம் - பவணலோகம். இது
பலவகைப் போகங்களினும் சிறப்புற்றதென்பது சைனர் கொள்கை.
இக்கொள்கையை, |