பக்கம் எண் :

பக்கம் எண்:602

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
           விருந்தின் மன்ன ரிருந்துபயன் கொள்ள
           இயற்றப் பட்ட செயற்கருங் காவினுள்
           மறைத்தன னவர்களைத் திறப்பட விரீஇயபின்
           உவந்த வுள்ளமோ டுருமண் ணுவாவும்
     110    புகுந்தனன் மாதோ பொலிவுடை நகரென்.
 
                      (இதுவுமது)
             105 - 110: அவ்வழி............நகரென்
 
(பொழிப்புரை) அம் மதுகாம்பீரவனம் என்னும் அச் சோலையி னூடேயும் புதுவதாக வந்த விருந்தினராகிய மன்னர்கள் தங்கி இருந்து இன்பம் நுகர்தற்பொருட்டு இயற்றப்பட்ட பிறர் யாரானும் செய்தற்கரிய பூங்காவின்கண் யூகி வாசவதத்தை முதலியோரை மறைத்துத் திறப்பட வைத்தபின்னர் அவ்வுருமண்ணுவா பெரிதும் மகிழ்ந்த நெஞ்சத்தோடே பொலிவுற்றுத் திகழும் அக்கோசம்பி நகரத்தின்கண் புகுந்தனன்; என்க.
 
(விளக்கம்) அவ்வழி - அம்மதுகாம்பீரவனத்தினுள். விருந்தின் மன்னர் - புதிய அரசர். பிறராற் செயற்கரும் கா என்க. அவர்களை - யூகிமுதலியவர்களை. திறப்பட - உறுதியுற. இரீஇய - இருத்திய. பொலிவுடை நகர் புகுந்தனன் என்க. நகர் - கோசம்பி.

4. உருமண்ணுவா வந்தது முற்றிற்று.