உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
5. கனாவிறுத்தது |
|
30 கலக்க
மறிந்த கனங்குழை
மாதர்
புலத்தல் யாவதும் பொருத்த
மின்றென
எனக்கு மொக்கு மெம்பெரு
மான்றன்
மனத்தகத் துள்ளோ ளின்னும்
விள்ளாள்
விழுத்தவ முடையள் விளங்கிழை பெரிதென
|
|
(உதயணனுடைய குறிப்பறிந்து பதுமாபதி தன்னிடம்
செல்லுதல் )
30 - 34 : கலக்கம்..........பெரிதென
|
|
(பொழிப்புரை) அவ்வுதயணனுடைய மனக் கலக்கத்தைக் குறிப்பால்
உணர்ந்து கொண்ட கனவிய குழையினையுடைய அப்பதுமாபதி இச்செவ்வியில் எம்பெருமானொடு
யான் ஊடுதல் ஒரு சிறிதும் பொருத்தமிலதாம் என்றும் இவ்வருத்தம் யானும் வருந்துதற்குரிய
ஒன்றேயாகலின் எனக்கும் ஒக்கும். என்னே ! விளங்கிய அணிகலன்களையுடைய வாசவதத்தை
நல்லாள் இன்னும் எம்பெருமானுடைய நெஞ்சினுள்ளே சிறிதும் அகலாளாய் வீற்றிரா நின்றாள்
! இங்ஙனம் இவன் நெஞ்சிலிடம் பெறுதற்கு அந்நங்கை பெரிதும் சிறந்த தவமுடையள் ஆதல்
ஒருதலை என்றும்; என்க.
|
|
(விளக்கம்) கலக்கம்
- உதயணனுடைய மனக்கலக்கம். மாதர் : பதுமாபதி. யாவதும் - ஒரு சிறிதும். அவ்வருத்தம்
எனக்கும் உரிய வருத்தமே என்றவாறு. இன்னும் என்றது, இத்தனை காலம் சென்றும் என்னை
மணந்த பின்னரும் என இருபொருளும் தோற்றுவித்தது. விள்ளாள் - நீங்காள். விழுத்தவம் -
சிறந்த தவம். விளங்கிழை :
வாசவதத்தை.
|