உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
5. கனாவிறுத்தது |
|
35 ஒழுக்க மதுவா முயர்ந்தோர்
மாட்டே என்றுதன்
மனத்தே நின்றுசில
நினையா அறியாள்
போலப் பிறிதுநயந்
தெழுந்துதன் ஆயஞ்
சூழ வரசனை
வணங்கி மாவீ
ழோதிதன் கோயில் புக்கபின்
|
|
(இதுவுமது) 35
- 39 : ஒழுக்கம்.........புக்கபின்
|
|
(பொழிப்புரை) உயர்ந்தோர்கண் தோன்றும் சிறந்த ஒழுக்கமே அஃதாம் என்றும், தன் மனத்தில் சில
நினைவுகளை அவ்விடத்தே சிறிது பொழுது நின்று நினைத்துப் பின் அவ்வுதயணனுடைய
நிலைமையைத் தான் அறிந்து கொள்ளாதாள்போன்றும் தான் வேறொன்றனை விரும்பி
அவ்விடத்தினின்றும் போவாள் போன்றுங்காட்டி, அம்மன்னனை மீண்டும் வணங்கித் தன்
தோழிமார் தன்னைச் சூழ்ந்து வரும்படி வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய அப் பதுமாபதி
தன் மண்டபத்திற்குச் சென்று புகுந்த பின்னர் ; என்க.
|
|
(விளக்கம்) (31)
பொருத்த மின்றெனவும் (34) தவமுடையள் எனவும் ஒழுக்கம் அதுவாம் எனவும் சிலநினைத்து
என்க. உதயணனின் மனக்கலக்கத்தை அறியாள் போல என்க. தான் அவ்விடத்துநின்றும்
போதற்கு ஓர் ஏதுக் காட்டுவாள் பிறிது நயந்து எழுவாள்போலப் போனாள் என்க. ஆயம் -
தோழியர் கூட்டம். மா - வண்டு. ஓதி :
பதுமாபதி.
|