பக்கம் எண்:609
|
|
உரை | | 4. வத்தவ காண்டம் | | 5. கனாவிறுத்தது | | முதிர்மலர்த்
தாமமொடு முத்துப்புரி
நாற்றிக்
கதிர்மணி விளக்கங் கான்றுதிசை
யழல 50 விதியிற் புனைந்த
வித்தகக்
கைவினைப் பதினைந்
தமைந்த படையமை
சேக்கையுட் புதுநலத்
தேவியொடு புணர்தல் செல்லான
| | (உதயணன் வாசவதத்தையை நினைந்து
வருந்தித்
துயிலல்)
48 - 52 : முதிர்.........செல்லான்
| | (பொழிப்புரை) வளைந்த மலர்மாலையோடே முத்துவடங்களையும் தூங்கவிட்டு ஒளிமிக்க மணிவிளக்கங்கள்
ஒளிகான்று நாற்றிசையினும் விளங்கா நிற்ப, நூல் முறைமையினாலே இயற்றப்பட்ட
வித்தகமிக்க தொழிற் சிறப்பையுடைய பதினைந்தாகப்படுத்த படைகள் அமைந்த
படுக்கையின்கண் புதிய இன்பத்தையுடைய தேவியாகிய அப்பதுமாபதியோடு இன்றுயில் கோடலும்
செய்யானாய்; என்க.
| | (விளக்கம்) முதிர்
மலர்த்தாமம் - வளைந்த மலர்மாலை. முதிர்தல் - வளைதல். முத்துப்புரி - முத்துவடம்.
ஒளிகான்று - அழல என்க. விதி - நூல்விதி. வித்தகம் - சதுரப்பாடு. பதினைந்தமைந்த
படையமை சேக்கை - பதினைந்து அடுக்கினையுடைய படுக்கை. அஃதாவது சிறு பூளை, செம்பஞ்சு,
வெண்பஞ்சு, சேணம், உறுதூவி, சேக்கை ஓர் ஐந்து என்னும் இவ்வைந்தினையும் அடுக்கிய ஒன்று
மும்மூன்றாகப் படுத்த பதினைந்து படையையுடைய படுக்கை என்க. ஐந்து மூன்றடுத்த அமளி எனக்
கலியினும் (10 : 10), ஐந்து மூன்றடுத்த செல்வத்தமளி எனச் சிந்தாமணியினும் (838)
வருதல் காண்க. புதுநலத் தேவி: பதுமாபதி : புணர்தல் செல்லான் : ஒரு
சொல்.
|
|
|