உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
5. கனாவிறுத்தது |
|
நறுந்த ணிருங்கவு ணளகிரி
வணக்கியதன் இறும்புபுரை யெருத்த
மேறிய ஞான்று 55 கண்டது முதலாக் கான
நீந்திக் கொண்டனன் போந்தது
நடுவாப் பொங்கழல் விளிந்தன
ளென்ப திறுதி யாக அழிந்த
நெஞ்சமொ டலமர லெய்தி மேனா
ணிகழ்ந்ததை யானா தரற்றி
|
|
(இதுவுமது)
53 - 59 : நறுந்தண்............அரற்றி
|
|
(பொழிப்புரை) நறிய குளிர்ந்த பெரிய கவுளையுடைய நளகிரி என்னும் களிற்றியானையைத் தனது யாழினாலே
வணக்கி அதன் மலையையொத்த பிடரிலே ஏறிச் சென்றபொழுது அவ் வாசவதத்தையைத் தான்
முதன்முதலாகக் கண்ட காட்சி முதலாகவும், அவளைக் கைப்பற்றிக்கொண்டு காட்டினைக் கடந்து
தன் நாட்டிற்கு வந்தது நடுவாகவும் மிக்க நெருப்பின்கண் அவ்வாசவதத்தை இறந்துபட்டாள்
என்பது இறுதியாகவும் முன்னாளிலே நிகழ்ந்தவற்றையெல்லாம் எடுத்தெடுத்துச் சொல்லி அழுது
அழிந்த நெஞ்சத்தோடே சுழன்று; என்க.
|
|
(விளக்கம்) நளகிரி
- பிரச்சோதனன் பட்டத்து யானை. இறும்பு - மலை. ஞான்று - பொழுது. வாசவதத்தையைக்
கண்டது முதலாக என்க. விளிந்தனள் - இறந்துபட்டாள். அலமரல் - மனச்சுழற்சி. மேனாள் -
முன்னாள். ஆனாது - அமையாது. அரற்றி -
புலம்பி.
|