உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
5. கனாவிறுத்தது |
|
முகனமர்
காதனின் மகனெனப் படுமது
பரந்த வெண்டிரைப் பாற்கட
லாகி விரும்பப்
படுமது வெள்ளியம்
பெருமலை வெண்மை
மூன்றுடன் கண்டதன் பயத்தாற் 120
றிண்மை யாழி திருத்தக
வுருட்டலும் வாய்மை
யாக வலிக்கற்
பாற்றென நோன்மை
மாதவ னுண்ணிதி னுரைப்ப
|
|
(இதுவுமது)
116 - 122 : அது.............உரைப்ப
|
|
(பொழிப்புரை) அக்கனவின்கண் பரவிய வெள்ளிய அலைகளையுடைய திருப்பாற் கடலாகி நின்னால் பெரிதும்
விரும்பப்படும் அக்குறிப்பும் வெள்ளிப்பெருமலைபோன்ற அவ்வெள்ளேறும் வெண்டாமரைப்
பூவும் ஆகிய மூன்று வெண்மைகளையும் நீ ஒருசேரக் கண்டதன் பயனாக அத்திருமகன் திண்ணிய
ஆணைச் சக்கரத்தைத் திருப்பெருகும்படி உருட்டுதலும் வாய்மையே என்று கருதும் தன்மையுடைத்து;
என்று பொறுமைமிக்க அத்துறவி அக்கனவின் பயனை நுணுக்கமாக விரித்துக் கூறுதலாலே;
என்க.
|
|
(விளக்கம்) பாற்கடலும்
வெள்ளிப் பெருமலைபோன்ற விடையும் வெண்டாமரையும் என மூன்று வெண்மைகளை ஒருசேரக்
கண்டதன் பயன் என்க. வலிக்கற்பாற்று - துணியும் பகுதியையுடையது. நோன்மை - பொறுமை;
வலிமையுமாம்.
|