உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
5. கனாவிறுத்தது |
|
130 ஆனா வுவகையொடு தானெதிர்
செல்லத் தேனார்
தாமரைச் சேவடி
வீழ்தலிற்
றிருமுயங்கு தடக்கையிற் றிண்ணிதிற்
பற்றி உரிமைப்
பள்ளி புக்கனன்
மாதோ பெருமதி
யமைச்சனைப் பிரிந்துபெற் றானென்.
|
|
(இதுவுமது)
130 - 134 : ஆனா..............பெற்றானென்
|
|
(பொழிப்புரை) அமையாத மகிழ்ச்சியோடே தானே எழுந்து அவ்வமைச்சன் எதிரே செல்லுதலாலே, அரசன் வருகை
கண்ட அவ்வமைச்சன் தானும் தேன்பொருந்திய செந்தாமரை மலர் போன்ற சிவந்த அவன்
திருவடிகளிலே வீழ்ந்து வணங்குதலாலே பேரறிவுடைய அவ்வமைச்சனைப் பிரிந்து பின் கூடிய பெரு
மகிழ்ச்சியோடே அவ்வுதயண மன்னன் திருமகளைத் தழுவும் தன் பெரிய கைகளாலே
அவ்வமைச்சனைத் தழுவி எடுத்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு உவளக மருங்கில் தனது
பள்ளியம்பலத்தின்கண் அவனோடு சென்று புகுந்தான்; என்க.
|
|
(விளக்கம்) ஆனா
- அமையாத. திரு - திருமகள். உரிமைப்பள்ளி - உவளக மருங்கிற் பள்ளியம்பலம்;
பெருமதியமைச்சன் : உருமண்ணுவா. "பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ" என்பது கம்பர்
வாக்கு
|