உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
6. பதுமாபதியை வஞ்சித்தது |
|
பிரிந்துபின் வந்த
பெருந்திற லமைச்சனொ டருந்திறல்
வேந்த னமைவரக் கூடி இருந்த
பின்றை நிகழ்ந்தது கூறெனச்
|
|
(உதயணன்
உருமண்ணுவாவை
வினாதல்)
1 - 3 : பிரிந்து............கூறென
|
|
(பொழிப்புரை) அவ்வுதயண வேந்தன் தன்னைப் பிரிந்து பகைவர்பால் சிறையிருந்து பின் வந்துகூடிய
பேராற்றல் வாய்ந்த அவ்வமைச்சனோடு நெஞ்சு பொருந்தக் கூடி அளவளாவி இருந்த பின்னர்,
"அன்பனே ! நீ என்னைப் பிரிந்த பின்னர் நினக்கு நிகழ்ந்ததனைக் கூறுக" என்று
அவ்வமைச்சனை வினவா நிற்றலின்; என்க.
|
|
(விளக்கம்) அமைச்சன்
: உருமண்ணுவா. வேந்தன் : உதயணன். அமைவர - அமைதல் வர. அமைச்சனை வினாவ
என்க.
|