உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
6. பதுமாபதியை வஞ்சித்தது |
|
செருச்செய்
மன்னன் சிறையிடைச்
செய்தலும் 5 தருசகன்
றன்வயின் விடுத்த
தன்மையும் பொருவகை
புரிந்தவர் புணர்ந்த
நீதியும் தெரிய
வெல்லாம் விரியக் கூறி
|
|
(உருமண்ணுவா நிகழ்ந்தவற்றை
உதயணனுக்குக்
கூறல்)
4 - 7 : செரு..............கூறி
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட உருமண்ணுவா தன்னோடு போர் செய்த எலிச்செவியரசன் சிறையிடைச் செய்த
செயல்களையும், தருசகமன்னன் தன்னைச் சிறைவீடு செய்த தன்மையையும் போர் புரியும்
வகையைச் செய்த அப் பகைமன்னர் நீதியோடு கூடி இருந்த செயலையும், பிறவற்றையும்
விளங்கும்படி விரிவாகக் கூறி; என்க.
|
|
(விளக்கம்) அமைச்சன்
: எலிச்செவியரசன். தன்வயின் - தன்னை. பொருவகை - போர் புரியும் முறை. புணர்ந்த
நீதி - மேற்கொண்ட நீதி. நீதி தன்னைக் கொல்லாதிருந்தமையும் தன்னைப் பேணியதும்
சிறைவீடு செய்ததும் பிறவும் என்க.
|