பக்கம் எண் :

பக்கம் எண்:623

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
          அந்நிலை கழிந்த பின்னிலைப் பொழுதின்
          இன்புறு செவ்வியு ளின்னது கூறென
  10      வன்புறை யாகிய வயந்தகற் குணர்த்த
 
                (உருமண்ணுவா வயந்தகனிடம் கூறல்)
                   8 - 10 : அந்நிலை............உணர்த்த
 
(பொழிப்புரை) அங்ஙனம் உருமண்ணுவா உதயணன் வினாவிற்கு விடை கூறிய அந்நிலை கழிந்த பின்னர் வற்புறுத்துபவனாகிய வயந்தகனைநோக்கி ''நம் மன்னன் இன்புற்றிருக்கும் செவ்வி பார்த்து நீ இச் செய்தியைக் கூறுவாயாக!'' என்று தனி இடத்தே வயந்தகனுக்குக் கூறா நிற்ப; என்க.
 
(விளக்கம்)  உதயணன் இன்புறு செவ்வியுள் என்க. வன்புறை -வற்புறுத்துபவன்; வற்புறுத்தும் இயல்பினையுடைய வயந்தகனுக்கு என்க.