உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
6. பதுமாபதியை வஞ்சித்தது |
|
உருமண்
ணுவாவினொ டொருங்குகண்
கூடித் தருமணன்
ஞெமரிய தண்பூம்
பந்தருட் டிருமலி
மார்பன் றேவி
பயிற்றிய வீணை
பெற்றது விரித்தவற்
குரைத்துத் 15 தேனேர்
கிளவியைத் தேடி யரற்ற
|
|
(உதயணன்
செயல்)
11 - 15 : உருமண்ணுவா............அரற்ற
|
|
(பொழிப்புரை) பின்னர் அழகுமிக்க மார்பினையுடைய அவ்வுதயண மன்னன் புதுவதாகக் கொணர்ந்து பரப்பிய
மணல் பரந்த குளிர்ந்த மலர்ப் பந்தலின்கீழ் உருமண்ணுவாவோடு கூடி அளவளாவி இருந்தபொழுது
தான் வாசவதத்தைக்குக் கற்பித்த கோடவதி என்னும் அத் தெய்வயாழினை அருஞ்சுகன்
வாயிலாய் மீண்டும் பெற்ற வரலாற்றினை அவ்வமைச்சனுக்குக் கூறி அக் கூற்றின்
வாயிலாய்த் தேன்போன்ற மொழியினையுடைய வாசவதத்தையை நினைந்தவனாய் அவளைத் தேடிப்
புலம்பா நிற்ப; என்க.
|
|
(விளக்கம்) மார்பன்
பந்தலின்கண் அமைச்சனோடு கூடி உரைத்து அரற்ற என்க. தருமணல் - புதுவதாகக் கொணர்ந்து
பரப்பிய மணல். ஞெமரிய - பரவிய. மார்பன் : உதயணன். தேவி : வாசவதத்தை. வீணை -
கோடவதி. அவற்கு - உருமண்ணுவாவுக்கு. தேனேர் கிளவி:
வாசவதத்தை.
|