உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
6. பதுமாபதியை வஞ்சித்தது |
|
கழிபெருங்
காதலொடு சென்றபி
னவ்வழிக் காசி
யரசன் பாவையைக் கண்டே 45 வாசவ
தத்தையை மறந்தனை
யாகிப் பரவை
யல்குற் பதுமா
பதியோ டிரவும் பகலு
மறியா வின்புற்
றுட்குவரு கோயிலு ளொடுங்குவனை
யுறைந்தது மற்போர்
மார்ப மாண்புமற் றுடைத்தோ
|
|
(இதுவுமது) 43
- 49 : அவ்வழி...........உடைத்தோ
|
|
(பொழிப்புரை) "அவ்வேற்று நாட்டின்கண் காசி அரசன் மகளாகிய பதுமாபதியைக் கண்டு நின் மனத்தில்
குடிகொண்டிருந்த பழைய கோப்பெருந்தேவி வாசவதத்தையைத் துவர மறந்தனையாகிப் பரந்த
அல்குலினையுடைய அப் பதுமாபதியோடு இரவிது பகலிது என்று அறிந்து கொள்ளாதபடி,
காமவின்பத்திலே அழுந்தி அச்சம் வருதற்குக் காரணமான அக்கோமகளின் கன்னி
மாடத்தின்கண் பிறர் அறியாமல் மறைந்துறைந்த செயல் மற்போர் வன்மையுடைய
மார்பையுடையோயே! மாண்புடைய செயலாகுமோ" என்று கூறி; என்க.
|
|
(விளக்கம்) அவ்வழி
- அவ்வேற்று நாட்டின்கண். காசியரசன் பாவை : பதுமாபதி. வாசவதத்தை என்றது,
நின்நெஞ்சிற் குடிகொண்டிருந்த வாசவதத்தை என்பது பட நின்றது. மறந்தனை என்றது, துவர
மறந்தனை என்பதுபட நின்றது. பரவை - பரப்பு. இரவென்றும் பகலென்றும் அறியாமல் என்க.
கன்னிமாடம் ஆகலின் உட்கு வருகோயில் என்றான். உட்கு - அச்சம். ஒடுங்குவனை -
ஒடுங்கினையாய்.
|