உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
மறப்பிடைக்
காட்டுதல் வலித்தன ராகிச் 15
சிறப்புடை மாதரைச் சிவிகையிற்
றரீஇப் பெறற்கருங்
கொழுநன் பெற்றி
காண்கென ஆய்மணி
விளக்கத் தறையகம் புகுத்தலின்
|
|
(இதுவுமது)
14 - 17: மறப்பு.........புகுத்தலின்
|
|
(பொழிப்புரை) அவ்வுதயண மன்னன் மெய்ம்மறந்திருக்கும் செவ்வியில் அப்பண்புகளை அவளுக்குக்
காட்டுதலைத் துணிந்தவராய்ப் பெருஞ்சிறப்புடைய அவ்வாசவதத்தையைச் சிவிகையில்
ஏற்றிக் கொணர்ந்து, ''தேவீ! பெறுதற்கரிய நின் கணவனுடைய தன்மையைக் கண்டருளுக''
என்று கூறி அழகிய மணிவிளக்கங்களையுடைய அப்பள்ளிப் பேரறையினூடே விடுத்தலாலே;
என்க.
|
|
(விளக்கம்) மறப்பிடை - மெய்ம்மறந்திருக்கும் செவ்வியில்.
சிறப்புடை மாதர் : பட்டத்துத் தேவியாகிய வாசவதத்தை. கொழுநன் - கணவன். ஆய் -
அழகு. அறை - பள்ளிப்பேரறை.
|