உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
நனவினு
மிதுவோ நறுந்தார் மார்பன் 30
தன்னல தில்லா நன்னுதன் மகளிரை
மறுதர வில்லாப் பிரிவிடை
யரற்றுதல்
உறுகடல் வரைப்பி னுயர்ந்தோற்
கியல்பெனல்
கண்டனெ னென்னுந் தண்டா வுவகையள்
|
|
(வாசவதத்தையின்
செயல்) 29
- 33 : நனவினும்.........உவகையள்
|
|
(பொழிப்புரை) 'நறிய மலர்மாலையினையுடைய மார்பினையுடைய எம்பெருமானுடைய நிலைமை இக்கனவினன்றி
நனவிடத்தும் இத்தன்மையதோ? என்னே! என்னே! தன்னை அல்லது பற்றுக்கோடில்லாத
நல்லநுதலையுடைய தன்காதலியை மீட்சியில்லாத பிரிவுக் காலத்தே இங்ஙனம், நினைந்து
அரற்றுதல் பெரிய கடலையுடைய இந்நில உலகத்தின்கண் உயர்குடிப்பிறந்த நம்பிக்கு இயல்பு'
என்று கூறும் சான்றோர் மொழி மெய்யாதலை யான் எம்பெருமான்பாற் கண்டேன் என்னும்
குறையாத மகிழ்ச்சியை உடையளாய்; என்க
|
|
(விளக்கம்) நனவினும் இதுவோ என்றது இக் கனவின்கண் அல்லது
நனவு நிலையினும் இத்தன்மைத்தோ என்பதுபட நின்றது. தன்னலதில்லா என்றது,
தன்னையன்றிப் பற்றுக் கோடு இல்லாத. மறுதரவு - மீட்சி. கடல்வரைப்பு - கடல் சூழ்ந்த
நில உலகம். உயர்ந்தோன் - உயர்குடிப் பிறந்தோன். கண்டனென் - வாய்மையாதலைக்
கண்டேன்.
|