உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
சார்ந்தன ளிருந்து வாங்குபு
கொண்டு
கிள்ளை வாயி னன்ன
வள்ளுகிர்
நுதிவிரல் சிவப்பக் கதியறிந்
தியக்கலிற்
காதலி கைந்நயக் கரணங் காதலன்
45 ஏதமில் செவிமுத லினிதி
னிசைப்ப |
|
(இதுவுமது)
41 - 45: சார்ந்தனள்............இசைப்ப |
|
(பொழிப்புரை) அக்கோடவதியினை அணுகிச் சென்று அமர்ந்து அதனைக் கையிலெடுத்துக் கிளியின் அலகு
போன்ற கூர்த்த நகத்தினையுடைய தன் விரலின் நுனி சிவக்கும்படி அவ்வியாழின் இசை
நடையைச் செவியா லோர்ந்து நரம்புகளை வருடாநிற்றலாலே அக் காதலியினது கைத்தொழில்
நயத்தையுடைய அவ்விசை அக் காதலனுடைய குற்றமற்ற செவியினூடே இனிதாகப் புகுந்து
ஒலியாநிற்ப; என்க. |
|
(விளக்கம்) சார்ந்தனளிருந்து - அணுகி வந்திருந்து. கிள்ளை
வாயின் அன்ன வள்ளுகிர் - கிளியினது அலகை யொத்த கூரிய நகம். நுதிவிரல் -
விரல்நுனி. கதி - இசை நடை. அது மூவகைப்படும். கைநயம் - கைத்தொழிலின் நயம். கரணம்
- இசை : ஆகுபெயர். செவிமுதல் ; முதல் -
ஏழாவதனுருபு. |