பக்கம் எண் :

பக்கம் எண்:643

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
         மாற்றுரை கொடாஅண் மனத்தோ டலமரீஇக்
         கோட்டுவன ளிறைஞ்சிக் கொடுங்குழை யிருப்ப
 
            (வாசவதத்தை வாளாவிருத்தல்)
             52 - 53 : மாற்றுரை.............இருப்ப
 
(பொழிப்புரை) அம்மொழி கேட்ட வளைந்த குழையினையுடைய அவ்வாசவதத்தை தன் நெஞ்சினுள் சுழற்சி எய்தி மறுமொழி கொடாளாய்த் தலைகுனிந்து வாளாவிருப்ப ; என்க.
 
(விளக்கம்) மாற்றுரை - மறுமொழி. அலமரீஇ - சுழன்று. கோட்டுவனள் - குனிந்து. கொடுங்குழை : அன்மொழித்தொகை; வாசவதத்தை.