| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 7. வாசவதத்தை வந்தது |
| |
நனவிற்
கண்ட நன்னுதன் மாதரைக்
கனவெனக் கொண்டலி னினியோர்க்கு
முரையான் காமுறு
நெஞ்சிற் காதலர்ப் பிரிந்தோர்க்
135 கேமுறு வேட்கை யாகு
மென்ப
தீதுகொ லென்னப் பற்பல
நினைஇ
இருந்த செவ்வியுள் வயந்தகன் குறுகி
|
| |
(இதுவுமது)
132 - 137 : நனவில்.........செவ்வியுள்
|
| |
| (பொழிப்புரை) நனவிலே தான் கண்ட நல்ல நெற்றியையுடைய வாசவதத்தையை அவ்வுதயணன் கனவென்றே
கொள்ளுதலாலே தன் நண்பர்களுக்கும் கூறானாய்க் காமமுற்ற நெஞ்சினையுடைய காதலரைப்
பிரிந்துறைவோருக்கு இன்பமுறுதற்குக் காரணமான அவாவினாலே நிகழுங் காரியம்
இத்தகையதுபோலும் என்று தன்னெஞ்சினுள்ளே இன்னோரன்ன பற்பலவற்றை நினைத்து இருந்த
பொழுதின் என்க.
|
| |
| (விளக்கம்) மாதர் : வாசவதத்தை. இனியோர் - நண்பர். ஏம்
- ஏமம் ; இன்பம். வேட்கையானிகழும் செயல் ஈது கொல் என்க. நினைஇ -
நினைத்து.
|