உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
பூங்குழை மாதரைப் பொருக்கெனத்
தம்மென்
றாங்கவன் மொழிந்த வல்ல னோக்கி 200
நன்னுதன் மாதரைத் தாயொடு
வைத்த
பொன்னணி கோயில் கொண்டனர் புகவே
|
|
(வாசவதத்தை
வருகை)
198 - 201 : பூங்குழை...........புகவே
|
|
(பொழிப்புரை) பின்னரும் அம் மன்னவன் 'நண்பனே ! பூங்குழையணிந்த என் காதலி வாசவதத்தையை விரைந்து
அழைத்திடுக!' என்று கூறிப் படாநின்ற அல்லலைக் கண்டு அம்மன்னனை அத்தோழர்கள்
வாசவதத்தையைச் சாங்கியத்தாயோடு வைத்திருந்த பொன்னால் அழகு செய்யப்பட்ட
அவ்விருந்து மாளிகைக்கு அழைத்துப் போய்ப் புகாநிற்பவென்க.
|
|
(விளக்கம்) பொருக்கென : விரைவுக் குறிப்பு. தம் - தாரும்.
அவன் உதயணன். நன்னுதன் மாதர் : வாசவதத்தை. தாய் - செவிலி,
சாங்கியத்தாய்.
|