உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
தோண்மீ தூர்ந்த துயர
நீங்கக்
காந்த ணறுமுகை கவற்று மெல்விரல்
210 பூண்கல மின்மையிற் புல்லெனக்
கூப்பிப் |
|
(இதுவுமது)
208 - 210 : தோள்...........கூப்பி
|
|
(பொழிப்புரை) தன் கைகடந்து பெருகிய துன்பமெல்லாம் அகலும்படி காந்தளினது நறிய அரும்பினைப் பழிக்கும்
அழகிய மெல்லிய விரல்களையுடைய தன் கைகளை அணிகலன் ஏதுமின்மையால் பொலிவிழப்பக்
குவித்துத் தொழுது என்க.
|
|
(விளக்கம்) தோண் மீதூர்ந்த - கைகடந்து பெருகிய. புல்லென -
பொலிவின்றித் தோன்றாநிற்ப.
|