உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
8. தேவியைத் தெருட்டியது |
|
25 இன்பஞ்
சிறந்த பின்றை
யிருவரும்
விரித்தரி தியற்றிய வெண்கா
லமளிப்
பழிப்பில் பள்ளி பலர்தொழ
வேறித்
திருவிரண் டொருமலர் சேர்ந்தவ
ணுறையும்
பொருவரு முருவம் பொற்பத் தோன்றி
|
|
(இதுவுமது)
25 - 29 : இருவரும்........தோன்றி
|
|
(பொழிப்புரை) அவ்விருவரும் அருமை தோன்ற விரித்துச் செய்யப்பட்ட யானை மருப்பினாலியன்ற வெள்ளிய
காலையுடைய கட்டிலையுடைய குற்றமற்ற படுக்கையின்கண் தோழிமார் பலரும் கைதொழுது வணங்க
ஏறி இரண்டு திருமகளிர் ஒரு செந்தாமரை மலரின்கண் சேர்ந்து உறையுமாப்போலே தம்
ஒப்பற்ற உருவம் பொலிவுறத் தோன்றி என்க.
|
|
(விளக்கம்) இருவரும் : வாசவதத்தையும் பதுமாபதியும். வெண்கால்
- யானை மருப்பினாலியன்ற கால். திரு - திருமகள். மலர் - செந்தாமரை மலர். இஃது
இல்பொருள் உவமை. இப் பகுதியில் 30 ஆம் எண்ணில் நிற்க வேண்டிய அடி
அழிந்தொழிந்தது. பொற்ப - பொலிய.
|