உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
8. தேவியைத் தெருட்டியது |
|
80 வழுக்கிய தலைமையை யிழுக்க
மின்றி
அமைத்தனை நீயென வவையது
நடுவண்
ஆற்றுளிக் கூற வத்துணை
யாயினும்
வேற்றுமைப் படுமது வேண்டா
வொழிகென
உயிரொன் றாதல் செயிரறக் கூறி
|
|
(உதயணன்
கூற்று)
80 - 84 : வழுக்கிய..........கூறி
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன் அப்பேரவையின் நடுவே தன் மகிழ்ச்சி மிகுதியால் யூகியை நோக்கி
"அமைச்சனே ! யான் தவறுசெய்து இழந்துவிட்ட அரசுரிமையை நீ மீண்டும் குறைசிறிதுமின்றி
அமைத்துத் தந்தனை" என்று அவ்வவை நடுவே முறையே கூறாநிற்ப : அதுகேட்ட அமைச்சன்
அவ்வளவேனும் நின்னால் கூறப்படும் முகமனுரையால் நம் பண்பு வேற்றுமைப்படும். ஆதலின்
அச்செயல் வேண்டா ஒழிக ! என்று கூறித் தாம் இருவேறுடம்புடையர் ஆயினும் இருவர்க்கும்
உயிர் ஒன்றேயாதலைக் குற்றமறக் கூறி அளவளாவி; என்க.
|
|
(விளக்கம்) நான் நீ என்னும் சொற்களே நம்மை
வேற்றுமைப்படுத்துகின்றன. உடலால் நீயும் நானுமாக வேற்றுமைப்பட்டிருப்பினும் உயிரால்
நோக்குமிடத்து யாம் ஒருவரே என்பது கருத்து.
|