உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
8. தேவியைத் தெருட்டியது |
|
பாடகச்
சீறடிப் பதுமா
பதியொடு
கூடிய கூட்டக் குணந்தனை
நாடி 100 ஊடிய தேவியை
யுணர்வினு
மொழியினும் நாடுங்
காலை நன்னுதன்
மடவோய்
நின்னொ டொத்தமை நோக்கி
மற்றவள்
தன்னொடு புணர்ந்தேன் றளரியல் யானென
|
|
(உதயணன்
கூறுதல்)
98 - 103 : பாடக.........யானென
|
|
(பொழிப்புரை) பாடகமணிந்த சிற்றடிகளையுடைய அப்பதுமாபதியோடு உதயணன் கூடிய கூட்டத்திற்குக் காரணமான
அவன் பண்பினை எண்ணி அவனோடு ஊடுதல் கொண்ட வாசவதத்தையை நோக்கி
உதயணமன்னன், "நல்ல நெற்றியினையுடைய மடந்தாய் ! கேள். உன்னை மீட்டுப் பெறுதற்கு
மகதத்திலே சென்று யாங்கள் இருந்த பொழுது இப் பதுமாபதியை யான் கண்டுழி இவளுடைய
உணர்ச்சியும் ஒளியும் பிறவும் ஆராயுங்கால் நின்னைப் போலவே தோன்றினமையால் இவளை
நீ என்றே கருதி இவளொடு கூடினேன் காண். தளர்ந்த நடையை யுடையோய்! என்னைச் சினவாதே
கொள்" என்று வேண்டா நிற்க; என்க.
|
|
(விளக்கம்) பாடகம் - ஒருவகைக் காலணி. கூட்டக்குணம் -
கூடுதற்குக் காரணமான பரத்தமைப்பண்பு. தேவி : வாசவதத்தை. தளரியல் :
விளி.
|