உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
9. விருத்தி வகுத்தது |
|
20 இருங்கடல்
வரைப்பி னிசையொடு விளங்கிய
சயந்தியம் பதியும் பயம்படு
சாரல் இலாவா ணகமு
நிலவ நிறீஇக்
குரவரைக் கண்டவர் பருவர
றீர ஆண்டினி
திருந்தியாம் வேண்ட வருகென 25
விடுத்தவற் போக்கிய பின்றை யடுத்த |
|
(இதுவுமது) 20
- 25 : இருங்கடல்.........பின்றை |
|
(பொழிப்புரை) பெரிய கடல் சூழ்ந்த இந்நில உலகத்தின்கண்
புகழோடு விளங்கிய சயந்தி மாநகரத்தையும், பயன்றரும் மலைச்சாரலையுடைய இலாவாணக
நகரத்தையும் அவன் ஆட்சியின்கண் நின்று நிலவும்படி அவனை அவற்றிற்கு மன்னனாய்
நிறுத்தி, ''அன்பனே! நீ சென்று நின்னுடைய இருமுதுகுரவர்களையும் கண்டு மகிழ்ந்து அவர்
துன்பம் தீரும்படி அந்நாட்டின்கண் இனிதே இருந்து யாம் அழைக்கும்பொழுது ஈங்கு வருவாயாக''
என்று கூறி அவ்வுருமண்ணுவாவிற்கு விடை ஈந்து போக்கிய பின்னர்;
என்க. |
|
(விளக்கம்) சயந்தியம்பதி - வத்தவ நாட்டின்கண் ஒரு சிறந்த நகரம். இலாவாணக நகரம் குறிஞ்சி
நிலத்தின் கண்ணது என்பது தோன்றப் பயம்படு சாரல் இலாவாணகம் என்றார். குரவர் -
தாயும் தந்தையும். பருவரல் - துன்பம். |