உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
9. விருத்தி வகுத்தது |
|
25 விடுத்தவற் போக்கிய
பின்றை யடுத்த ஆதி
யாகிய சேதிநன் னாடு
யூகிக் காகென வோலை போக்கி
|
|
(யூகியின்
பேறு) 25
- 27 : அடுத்த..........போக்கி
|
|
(பொழிப்புரை) தன் நாட்டினை அடுத்ததும் தனக்கு முதலில்
ஆட்சி செய்ய அமைந்ததும் ஆகிய சேதி என்னும் நல்ல நாடு யூகிக்குச் சீவிதம் ஆகுக என்று
அந்நாட்டிற்கு ஓலைவிடுத்த பின்னர்; என்க.
|
|
(விளக்கம்) வத்தவநாட்டினை அடுத்ததும் தன் ஆட்சிக்கு முதலாயதும் ஆகிய சேதிநாடு என்க. யூகிக்குச்
சீவிதம் ஆகுக என்று என்க.
|