பக்கம் எண் :

பக்கம் எண்:694

உரை
 
4. வத்தவ காண்டம்
 
9. விருத்தி வகுத்தது
 
          இடவகற் கிருந்த முனையூ ருள்ளிட்
          டடவி நன்னா டைம்பது கொடுத்து
    30    விறற்போர் மன்ன ரிறுக்குந் துறைதொறும்
          புறப்பது வாரமொடு சிறப்புப்பல செய்து
          புட்பகம் புக்குநின் னட்புட னிருந்து
          விளித்தபின் வாவென வளித்தவற் போக்கி
 
               (இடவகன் பெற்றவை)
             28 - 33 : இடவகன்.........போக்கி
 
(பொழிப்புரை) பின்னர் இடவகன் என்னும் அமைச்சனுக்கு அவன் முன்பிருந்த முனையூர் உள்ளிட்ட குறிஞ்சி நிலப் பகுதியாகிய நல்ல ஐம்பது ஊர்களைக் கொடுத்து வெற்றியையுடைய போரினையுடைய மன்னர் திறைப்பொருள் கொணர்ந்து அளக்கும் இடந்தொறும் உள்ள இறையிலி நிலங்களோடே பிறவும் பல சிறப்புகளைச் செய்து, ''நண்பனே! நீ புட்பக நகரத்திற்குச் சென்று உன்னுடைய கேளிரோடு இருந்து வாழ்க. யான் அழைத்தபொழுது ஈண்டு வருவாயாக'' என்று அவ்விடவகனுக்கும் விருத்தி வழங்கிச் செலுத்திய பின்; என்க.
 
(விளக்கம்) முனையூர் - எல்லைப்புறப் பகுதி. அடவிநாடு - குறிஞ்சி நிலத்தூர்கள். புறப் பதுவாரம் - இறையிலி நிலவருவாய் போலும்(?) புட்பகம் - ஒரு நகரம். விளித்தபின் - அழைத்தபின்.